PDF பைல்களை பார்க்க புதிய மென்பொருள்

நாம் பயனுள்ள மென்பொருளைப்பற்றி பார்க்கப்போகிறோம். அது எதற்கு என்று தலைப்பை பார்த்தவுடன் தெரிந்திருக்கும். அதாவது Tutorials, E-Books என பல வகையிலும் PDF கோப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இது விரைவாகவும் தேவையான சில வேளைகளையும் செய்ய வேண்டும் என எண்ணுவோம். PDF கோப்புகளை பார்க்க இணையத்தில் நிறைய மென்பொருள்கள் காணப்படும். அதில் சிறந்தவொரு மென்பொருள்கள் என சிலவற்றையே குறிப்பிடலாம்.


PDF கோப்புகளை நம் கணனியில் பார்ப்பதற்காக சில விஷேடித்த மென்பொருள்களை நிறுவியிருப்போம். அதில் முன்னேகரமானது அடோப் ரீடர்(Adobe Reader) ஆகும் அதனையே அனேகமானோர் நிறுவியிருப்பார்கள்.

இது இயங்குவதற்கு கொஞ்சம் தாமதிக்கும். இதனால் நேரத்தை குறைக்க, விரைவாக இயங்கும் விஷேடித்த மென்பொருள் எனும் போது பெரும்பாலானோர் Fox it Reader ஐ கையாளுவர். ஆனால் Sumatra PDF எனும் மென்பொருள் விண்டோஸ் ற்கு அதிவிரைவாகவும் அடோப் ரீடரின்(Adobe Reader) சில பண்புகளையும் கொண்டுள்ளது. Sumatra எனும் போது சுனாமி சில வேளை ஞாபகம் வந்திருக்கலாம். இது Windows OS ற்கு அதிவேகமாக இயங்குவதால் நேரத்தை சிக்கனப்படுத்தலாம். இதனை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்.இது ஒரு Open Source மென்பொருளாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை